ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல சம்பவங்களுடன் தொடர்புடைய, நாட்டிலிருந்து தப்பியோடியுள்ள 236 நபர்களுக்கு எதிராகச் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 236 நபர்களில் 96 பேர் சர்வதேச அளவில் தேடப்படும் முக்கிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளாவர்.
2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இதுவரையிலான காலப்பகுதிக்குள் போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய 37 பேர் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலும், சர்வதேச பொலிஸின் ஆதரவுடன் இதுவரை மொத்தம் 42 நபர்கள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.





