க.பொ.த உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
உயர் தரப் பரீட்சை ஆரம்பமான நிலையில், இன்று காலை (10) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய ஆணையாளர் நாயகம், விடைத்தாள் திருத்தும் பணி செப்டம்பர் 03 ஆம் திகதி முதல் தொடங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 2026 ஆம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை இன்று (10) தொடங்கியது. அதன்படி பரீட்சையான நாடு முழுவதும் உள்ள 2,532 மையங்களில் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெற உள்ளன.
அந்தவகையில், 264,496 பாடசாலை மாணவர்கள் மற்றும் 107,814 தனியார் பரீட்சார்த்திகள் உட்பட மொத்தம் 372,310 மாணவர்கள் இந்த பரீட்சையில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் பரீட்சை திட்டமிட்டபடி தொடங்கியதாகவும், இதுவரை எந்தப் பிரச்சினைகளும் ஏற்படவில்லை என்றும் பரீட்சைகள் ஆணையர் நாயகம் இந்திகா குமாரி குறிப்பிட்டுள்ளார்.





