பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இன்று (10) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

 



 சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இன்று (10) முதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த விடயத்தினை பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும், சிரேஷ்ட பேராசிரியருமான தெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேற்று (09) முதல் விடுதி மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 சமீப நாட்களாக நிலவிய கடும் வானிலை காரணமாக, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் ஓகஸ்ட் 3 ஆம் திகதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

 இதேவேளை மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் "சரசவி மெதுர" விடுதியின் கீழ் தளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.