'ஒற்றைச் சாளர அனுமதி' (Single Window Approval) முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

 


 
இலங்கையில் சர்வதேசத் திரைப்படங்களின் படப்பிடிப்புகளை மேற்கொள்வதற்கான அனுமதிப் பத்திர நடைமுறைகளை எளிமைப்படுத்தும் நோக்கில் 'ஒற்றைச் சாளர அனுமதி' (Single Window Approval) முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதன் மூலம் வெளிநாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பல்வேறு திணைக்களங்களுக்குச் சென்று அனுமதி பெறுவதில் ஏற்படும் காலதாமதம் முற்றாகத் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த புதிய பொறிமுறையானது நாட்டின் திரைப்பட சுற்றுலாத் துறையை (Film Tourism) அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதுடன், இலங்கையை சர்வதேசத் திரைப்பட படப்பிடிப்புகளுக்கான முக்கிய மையமாக மாற்றுவதற்கும் வழிவகுக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.