பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவினால் சேதமடைந்த புதுப் பாலத்தின் மீள் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு










வரதன்




 மட்டக்களப்பு நகரை இணைக்கும் பிரதான பாலங்களில் ஒன்றான காணப்படும் புது பாலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென இடிந்து விழுந்தது இதனால் கடந்த சில தினங்களாக இந்த வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள் போக்குவரத்திற்கு பல சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்

 இருப்பினும் பாராளுமன்ற உறுப்பினரின் துரிதமான முயற்சியினால் தற்போது மீண்டும் தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன

 மாவட்ட அபிவிருத்தி குழு  தலைவர்  கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோரிடம் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விடுத்த வேண்டுகோளின் பேரில் தற்போது பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

 நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சினால் மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள் தலைமையில் தற்போது பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

 எதிர்வரும் காலங்களில் மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த சேதம் அடைந்த இப் பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் ஒன்று  நிர்மாணிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்க ப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு இதன்போது கருத்து தெரிவித்தார்

மன்முனை  வடக்கு பிரதேச செயலாளர் திருமதி V. சிவப்பிரியா  வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியின்  மட்டு மாநகர சபையின் உறுப்பினர்கள் என பலரும்  இதன்போது கலந்து கொண்டனர்