( வி.ரி.சகாதேவராஜா)
2026ம்
ஆண்டுக்கான கதிர்காம கந்தனாலய ஆடிவேல் விழா உற்சவத்திற்கான கொடியேற்றம்
இன்று(15) புதன்கிழமை மாலை 4 மணியளவில் பால்குடி பாவா பள்ளிவாசலில்
நடைபெறும்.
இன்று இரவு முதல் நாள் திருவிழா பெரஹரா நடைபெறும்.
தொடர்ந்து 15 தினங்கள் திருவிழா பெரஹரா இடம்பெற்று
கந்தனின் தீர்தோற்சவம் எதிர்வரும் 30 ஆம் திகதி வியாழக்கிழமை காலை மாணிக்கங்கையில் இடம்பெறும்.
இதேவேளை
கடந்த 10 ஆம் திகதி திறந்த காட்டுப் பாதை 15 தினங்கள் பக்தர்களுக்கு
திறந்திருக்கும். இதுவரை சுமார் 30 ஆயிரம் அடியார்கள் பயணித்துள்ளனர்.
இப் பாதை எதிர்வரும் 24 ஆம் திகதி மீண்டும் பூட்டப்படும்.






