15 துறைகளைச் சேர்ந்த திறமையாளர்களை ஒன்றிணைத்து உலகச் சாதனை படைத்தது முன்னா பியூட்டி அகாடமி.
இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூரில் அமைந்துள்ள இஷ்கா மண்டபத்தில் 25ஆம் தேதி வெகுவிமர்சையாக நடைபெற்றது.
நிகழ்வின்போது தையல், கேக் தயாரிப்பு, மேக்-அப் கலை, ஆரி வொர்க், நகை தயாரிப்பு, சோப் தயாரித்தல், கைவினைப் பொருட்கள் உற்பத்தி, அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு (காஸ்மெட்டிக்ஸ்), ஹென்னா ஆர்ட், கிஃப்ட் பேக்கிங், ரெசின் ஆர்ட், பூ அலங்காரம், சித்திரத் தையல் (எம்பிராய்டரி) மற்றும் நடனம் உள்ளிட்ட துறைகளில் பங்கேற்றவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேற்கண்ட துறைகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ஒப்படைக்கப்பட்ட பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்ததையடுத்து, சோழன் உலகச் சாதனைப் புத்தக நிறுவனம் மற்றும் இன்டர்நஷனல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் உலகச் சாதனைச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சோழன் உலகச் சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் செயலாளர் கதிரவன் த. இன்பராசா, மொஹமட் பர்சான், சோலையூரான் அ. தனுஷ்கரன் ஆகியோரும், இன்டர்நஷனல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சார்பில் வழக்கறிஞர் அன்பழகன் குரூஸ் அவர்களும் சாதனையாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி ஊக்குவித்தனர்.
இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த முன்னா பியூட்டி அகாடமியின் நிறுவனர் முனாபிரா, பங்கேற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
சோழன் உலக சாதனை படைத்த சாதனையாளர்களை அந்நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் மற்றும் பன்னாட்டு தலைவர்கள் என அனைவரும் வாழ்த்தி பாராட்டினார்கள்

.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)



.jpeg)
.jpeg)




