பட்டிருப்பு றொட்டரி கழகத்தினால் ஏற்பாடு செய்திருந்த மண்முனை தென் எருவில்பற்று பிரதேச உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ முகாமானது பிரதேச செயலாளர் திரு உ. உதயஸ்ரீதர் அவர்களின் தலைமையில், பட்டிருப்பு றொட்டரி கழக தலைவர் திரு நிறோசாந் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (2026.07.01) பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் போது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள், கண் பரிசோதனை மற்றும் மூக்குக் கண்ணாடி வழங்கல் போன்றன இடம் பெற்றது.
இந்த முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் பங்கேற்றிருந்ததுடன், களுவாஞ்சிகுடி நந்தவன முதியோர் இல்ல முதியோர்களும் பங்கேற்று பயனடைந்திருந்தனர்.
இம் மருத்துவ முகாமில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்ய கௌரி தரணிதரன், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், றொட்டரி கழக திட்ட உத்தியோகத்தர் திரு நீலன், செயலாளர் திரு லோகிதராஜ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)



.jpeg)



.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)





