போரதீவுப்பற்று பிரதேச சபையின் புதிய செயலாளராக சண்முகராஜா விஜிதராஜா கடமையேற்பு

 

 







 

வரதன்



மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளராக திரு.சண்முகராஜா விஜிதராஜா அவர்கள்   நேற்றைய தினம்    03.07.2026 உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

​அவரது பதவி உயர்வு மற்றும் கடமையேற்பை முன்னிட்டு,     03.07.2026 காலை போரதீவுப்பற்று பிரதேச சபை வளாகத்தில் விசேட வரவேற்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

​இந் நிகழ்வில், போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் முன்னிலையில், தினவரவு டாப்பில் கையொப்பம் இட்டு தனது கடமையினை பொறுப்பேற்றார்.

​இவ் நிகழ்வின் போது பிரதேச சபையின் முன்னாள் பதில் செயலாளர் எஸ்.பகீரதன், சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

​புதிய செயலாளருக்குப் பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, அவர் தனது புதிய பதவியில் திறம்படச் செயலாற்ற சபையின் தவிசாளர் மற்றும் உத்தியோகஸ்தர்கள் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.