வாழைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவகங்கள், மீது திடீர் பரிசோதனை..

 

 


 























 


























வாழைச்சேனை, கிரான்,  கோறளைப்பற்று மத்தி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவகங்கள், வெதுப்பகங்கள், குளிர்பான நிலையங்கள், பழக்கடைகள், தேனீர் சாலைகள் ஆகிய நிலையங்கள் மீது திடீர்   பரிசோதனை.


 உணவகங்கள், உணவு கையாளும் நிலையங்களில் சுகாதாரப் பிரிவினர் தொடர்ச்சியான  பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 30.7.2026  இன்று வாழைச்சேனை, கிரான், கோரளைப்பற்று மத்தி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிக்குட்பட்ட பகுதியில்  உணவு கையாளும்  நிலையங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. Dr. R. முரளீஸ்வரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக ,சுற்றுச் சூழல் தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. M.அச்சுதன் அவர்களின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்பட்ட இப்பரிசோதனையில்,

  கிரான் சுகாதார வைத்திய அதிகாரி Dr. சிவலக்‌ஷன், வெல்லாவெளி  சுகாதார வைத்திய அதிகாரி Dr. உதயசூரிய       பிராந்தியத்திற்கு பொறுப்பான  மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்கள்  பிராந்திய உணவு ஒளடத பரிசோதகர், மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர்.

பரிசோதனைகளின் போது உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 19  உணவக நிலையங்கள்  கண்டறியப்பட்டு அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன்   02  உணவக நிலையங்கள் உடனடியாக மூடப்பட்டது. குறிப்பாக, ஊழியர்களுக்கு மருத்துவச் சான்றிதழ்கள் இல்லாமை மற்றும் சுகாதாரமற்ற சூழலில் உணவுப் பொருட்கள் கையாளப்படுதல், சேமித்தல் போன்ற குறைபாடுகள் காணப்பட்டது.
அத்துடன்

 உணவுப் பொருட்களை கையாளுபவர்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான உணவு கையாளுதல் தொடர்பான தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டதுடன்
எதிர்வரும் காலங்களில் பரிசோதனைகள் அதிகரிக்க படும் எனவும் சுகாதார அதிகாரிகளினால்  தெருவிக்கப்பட்டது.