2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்
தராதர உயர் தரப் பரீட்சையின் (A/L) மறுமதிப்பீட்டுப் பெறுபேறுகள் தற்போது
வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சார்த்திகள் தங்களது
மறுமதிப்பீட்டுப் பெறுபேறுகளை, பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ
இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk
ஆகியவற்றுக்குச் சென்று பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





