பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானாவோ (Mindanao) தீவுக்கு அருகில் இன்று (8) சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

 


 

பிலிப்பைன்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள மிண்டானாவோ (Mindanao) தீவுக்கு அருகில் இன்று (8) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ஆழிப்பேரலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஜேர்மன் புவியியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.

ஆரம்பத்தில் இந்த நிலநடுக்கத்தின் அளவை 8.2 மெக்னிடியூட் அலகாகக் கணிப்பிட்டிருந்த அந்த மையம், பின்னர் அதனை 7.8 மெக்னிடியூட் அலகாக மாற்றியமைத்தது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் அதன் அண்டை நாடான இந்தோனேசியாவின் புவியியல் முகவர் அமைப்புகள் ஆழிப்பேரலை எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.

எனினும், இரு நாடுகளிலும் உடனடிப் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.