மூன்று முக்கோண கதைகளை கையில் எடுத்து, கடந்த வருடம் "சாவடி" திரைப்படத்தை வெளியீடு செய்து வைத்து, பல சர்வதேச விருதுகளை குவித்து, வைத்திருக்கின்ற தேவா சினி ப்ரொடக்ஷன், இவ்வாண்டு "துவக்கு" திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
முறைப்படி திரைப்பட கூட்டுத் தாபனத்தில் பதிவு செய்த இத்திரைப்படம் விரைவில் பல நாடுகளில் வெளிவரக் காத்திருக்கிறது.
Deva Cinematic Universe(DCU) திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படத்தின் இன்னும் ஒரு முக்கிய பாத்திரம் மதிசுதா.
ஈழத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனரும், நடிகருமான மதிசுதாவை துவக்குத் திரைப்படத்தில் அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சியடைவதாக தேவா சினி புரோடக்சன் அறிவித்திருக்கிறது.





