கிழக்கு
மாகாணத்தின் தென்திசைஎல்லையான குமுக்கன் நதி தீரத்தில் பன்னெடுங்காலமாக
எழுந்தருளி அருள் சாதித்துக் கொண்டிருக்கும் குமுக்கன் காளியம்மன்
ஆலயத்திற்கு புதிய அம்மன் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது.
சைவா சமய அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்தது.
ஒன்றரை
வருடங்களுக்கு மேலாக உடைந்த நிலையில் காணப்பட்ட குமுக்கன் காளி அம்மன்
திருச்சிலை, அம்மன் அருள்வாக்கின்படி சைவா சமய பணியாளர்கள் அமைப்பின்
முன்னெடுப்பில் புதிய சிலையாக வடிவமைக்கப்பட்டு, கடந்த 2026.05.29 ஆம்
திகதி புனிதமாக புனர்பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இப்புனிதப் பணி, சைவா சமய பணியாளர்கள் அமைப்பின் தலைவர் ரா. சுவோஜன் தலைமையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
பல
சவால்கள் மற்றும் தடைகளுக்கு மத்தியில் இப்பணியை முன்னெடுத்து
நிறைவேற்றுவதற்கு அம்மனின் அருளோடு உறுதுணையாக இருந்த இரத்மலானையைச்
சேர்ந்த அபிநயா செல்வச்சந்திரன் குடும்பத்தினரை பலரும் பாராட்டினர்.
நிகழ்வில் சைவா சமய பணியாளர்கள் அமைப்பினர் கலந்து கொண்டனர்.
( வி.ரி.சகாதேவராஜா)
















