பசியால் முந்திரி பழம் பறித்தவர் சுட்டுக்கொலை - இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்




வனாத்தவில்லு பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணியளவில் வனாத்தவில்லு கரதிவு பகுதியில் உள்ள முந்திரி தோட்டம் ஒன்றில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் அத்துகோரலகே பிரதீப் சுசாந்த என்ற 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

சிலாபம் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான, கரதிவு பகுதியில் அமைந்துள்ள முந்திரி தோட்டம் அறுவடைக்காக நபர் ஒருவரால் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

அந்த முந்திரி தோட்டத்தை பாதுகாப்பதற்காக குத்தகைதாரரால் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை தோட்டத்தில் இரகசியமாக நுழைந்து முந்திரி பறிக்க முயன்ற நபர் ஒருவர் மீது பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக புத்தளம் தள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து வனாத்தவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.