உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக கோட்டை நீதிவான் நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானியான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே பிரதான சந்தேகநபராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள வழக்கு, இன்று (03) புதன்கிழமை கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட மூவருக்கும் எதிராக இந்த வெளிநாட்டுப் பயணத்தடை உத்தரவை நீதிவான் பிறப்பித்தார்.





