யோகா பயிற்சியை நிறைவு செய்த மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்கள்

 


திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள திருகோணமலை வலயக் கல்வி பிரிவின் தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் யோகா பயிற்சியை நிறைவு செய்த மாணவ மாணவிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் மண்டபத்தில் இன்று (03) இடம் பெற்றது.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் துறை திணைக்களம் குறித்த யோகா பாடநெறியை ஏற்பாடு செய்து நடாத்தி முடித்துள்ளது.
குறித்த பாடசாலையில் தரம் 6- 9 வரையிலான 40 மாணவ மாணவிகள் இதில் பங்கேற்று 24 மணித்தியாலங்கள் கொண்ட பாடநெறியை நிறைவு செய்திருந்தனர்.

யோகா பயிற்றுவிப்பாளராக வைத்தியர் எச்.எம்.ஹாரிஸ் வழிநடாத்தியிருந்தார்.
குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் துறை திணைக்கள மாகாணப் பணிப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் கலந்து சிறப்பித்ததுடன் இச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு குறித்த பாடசாலையின் அதிபர் ஆர்.பி ராஜாசுரேஷ் தலைமையில் இடம் பெற்றது.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலக பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திருமதி துசாரி, துறைசார் வைத்திய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.