மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவிற்கு
உட்பட்ட
அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களின் வாண்மைவிருத்தி செயலமர்வு, தாந்தா மலை
முருகனாலய அனுசரணையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (6)
சனிக்கிழமை நடைபெற்றது.
பட்டிப்பளை உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன் செயலமர்வை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றினார்.
தாந்தா மலை முருகனாலய செயலாளர் எஸ்.சிறிதரன்( ஆசிரியர் )மற்றும் கலாச்சார உத்தியோகத்தர் கலந்து சிறப்பித்தனர்.
15
பாடசாலைகளைச் சேர்ந்த 46 ஆசிரியர்கள் பங்கேற்ற இந்நிகழ்வின்,
ஒருங்கிணைப்பினை பிரதேச செயலக கலை கலாசார உத்தியோகத்தர்கள் ஏற்பாடு
செய்திருந்தனர்.
உதவி பிரதேச செயலாளர் பார்த்திபன் உரையாற்றுகையில்..
சமய
நிறுவனங்கள் சமூக அபிவிருத்தியில் பிரதான பங்காளிகளாக இருக்க வேண்டும்
.சமூக ஒழுக்கத்தில் அறநெறி கல்வியின் பங்கு மிக முக்கியமானது. எனவே அறநெறி
ஆசிரியர்கள் தங்கள் ஆளுமை விருத்தியை வளர்த்துக் கொள்வதன் மூலம் சமூக
ஒழுக்கத்தை கட்டி எழுப்ப முடியும் என்றார்.
மூன்று வளவாளர்கள் கருத்தரங்கை நடாத்தினார்.
( வி.ரி. சகாதேவராஜா)









