சுற்றுச்சூழல்
மாசடைவதைத் தடுக்கும் நோக்கில், தாங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக் மற்றும்
பொலித்தீன் கழிவுகளை மீண்டும் சேகரிக்கும் பொறுப்பை உற்பத்தியாளர்களுக்கே
வழங்கும் புதிய சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டுவரவுள்ளது
சந்தைக்கு விடப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை மீண்டும் சேகரிக்கும் பொறுப்பு உற்பத்தியாளர்களைச் சாரும்.
மூன்று ஆண்டுகளுக்குள் படிப்படியாக கழிவு சேகரிப்பை அதிகரிக்க வேண்டும்.
முதல் வருடம்: 40%
இரண்டாம் வருடம்: 60%
மூன்றாம் வருடம்: 80%
அரச
அலுவலகங்களில் சிறிய நீர் போத்தல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு,
வணிக நிலையங்களில் பொலித்தீன் பைகளைப் பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர்
#அன்டன்ஜயகொடி





