சுகாதார அமைச்சினால் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பாரிய டெங்கு பரிசோதனைகள் முன்னெடுப்பு




 










 

 வரதன்

 

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர் இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று பாடசாலைகள் அரச திணைக்களங்கள் ஆலயங்கள் கட்டிட நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படும் இடங்கள் போன்ற இடங்களில் தேசிய செயல்திட்டத்தின் மூன்றாவது நாளான இன்று டெங்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது

 மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களமும் போலீஸ் திணைக்களத்தின் சுற்றாடல் மற்றும் டெங்கு ஒழிப்பு பிரிவு மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்ததாக

 இந்த பாரிய டெங்கு பரிசோதனை  செயற்திட்டம் இன்று சுவாமி விபுலானந்தர் இசை நடன கல்லூரியில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ் உதயகுமார் தலைமையில் இந்தப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது 

அதிகளவு மாணவர்களைக் கொண்ட இந்த வளாகத்தில் குடிநீர் கிணறுகள் மலசல கூட வடிகான்கள் பூந்தோட்டம் சுற்றுப்புற சூழல் என்பன  பூரணமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதிக டெங்கு நோயாளிகள்  காணப்படுவதனாலும் அதிலும் குறிப்பாக மன் முனை  வடக்கு மற்றும் கிரான் பிரதேச  செயலக பிரிவில் தொடர்ச்சியாக டெங்கு நோயாளிகள் இனம் காணப்பட்டு வருவதனால் இந்த தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தில் இந்த பிரதேச செயலக பிரிவில் அதிகப்படியான பரிசோதனை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ் உதயகுமார் கருத்து தெரிவித்தார்