13நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 3,500 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த மாபெரும் போட்டியில் 7ஆம் தர மாணவி சும்ரி பாத்திமா சுதா வெற்றி
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் கணிதப் போட்டியில் (ABACUS L1B) முதலாம் இடத்தைப் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்
மதவாச்சி அல்-மதீனா உயர்தரப் பாடசாலையின் 7ஆம் தர மாணவி சும்ரி பாத்திமா சுதா வெற்றி தனதாக்கி கொண்டுள்ளார்
13நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 3,500 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த மாபெரும் போட்டியில் அவர் இந்த மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
அல்-மதீனா பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினரால் குறித்த சிறுமிக்கு விசேட வரவேற்பு நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.





