ஆடை விற்பனை நிலையம் ஒன்றிற்குள் இருந்து கணவன் - மனைவி சடலங்கள் மீட்பு.

 



ஆடை விற்பனை நிலையம் ஒன்றிற்குள் இருந்து கணவன் மற்றும் மனைவியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
புளத்சிங்கள பகுதியில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றிலிருந்தே இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குக் காவல்துறையினர் விரைந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 55 வயதுடைய பெண் ஒருவரும் அவரது 61 வயதுடைய கணவருமே உயிரிழந்துள்ளனர்.
எனினும் இவர்களது மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இச்சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் கண்டறிவதற்காகக் காவல்துறையினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.