போதைப்பொருள்
கடத்தல்காரர் ஒருவரின் பெருந்தொகை சொத்துக்கள் சட்டவிரோத சொத்துக்கள்
புலனாய்வுப்பிரிவினரால் நேற்றைய தினம் (05) முடக்கப்பட்டுள்ளன.
இவர்
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் என்றும்,
சட்டவிரோதமாகப் பெறப்பட்ட பணத்தில் வாங்கப்பட்ட சொத்துக்கள் இவையென்றும்
தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு 14-இல் வசிப்பவர் என்றும், போதைப்பொருள் கடத்தல் மூலம் வாங்கப்பட்ட பல சொத்துக்களே இவ்வாறு செயலிழக்க செய்யப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக
பெறப்பட்ட பணத்தில் வாங்கப்பட்ட, தொட்டலங்க பகுதியில் உள்ள சுமார் 30
இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 1.30 பேர்ச் நிலம் மற்றும் 0.75 பேர்ச் நிலம்,
அத்துடன் மூன்று மாடி வீடும் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட சொத்து தொடர்பான முடக்குதல் உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்றம் நேற்று (05) முதல் 7 நாட்களுக்கு பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.