கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்கும் உன்னத நோக்கில், மட்டக்களப்பில் குளிரூட்டப்பட்ட குடிநீர் அருந்தும் உபகரணம் இன்று (06.06.2026) காலை விசேட பூஜை வழிபாடுகளுடன் திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்லடி உப்போடை நொச்சிமுனை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், ஸ்ரீ பேச்சி அம்மன் ஆலயம் மற்றும் நாகதம்பிரான் ஆலய நிர்வாகத்தினரின் சீரிய ஒழுங்குபடுத்தலில் இந்த நற்பணி முன்னெடுக்கப்பட்டது. அமரர்களான கந்தசாமி கருணைலெட்சுமி ஆகியோரின் நினைவாக, சுவர்ணப்பிரபா குடும்பத்தினரின் முழுமையான நிதி அனுசரணையில் இவ்வுபகரணம் நிறுவப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில், கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலைக்கு முன்பாக அமையப்பெற்றுள்ள வம்மி பிள்ளையார் ஆலயத்தின் முகப்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பாதையூடாகப் பயணிக்கும் பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பக்தர்கள் எனப் பலரும் பயனடைவர்.
கடுமையான வெயில் காலங்களில் தாகத்தால் தவிக்கும் பொதுமக்களுக்கு, இந்தத் தூய்மையான குளிரூட்டப்பட்ட குடிநீர் வசதி பெரும் நிம்மதியையும் ஆறுதலையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
மக்களின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து, ஆன்மீகப் பணியோடு சமூகப் பணியையும் இணைத்துச் செய்த பெருமைக்குரிய ஆலயங்களின் நிர்வாக சபையினருக்கும், மறைந்த முன்னோர்களின் நினைவாக இந்த மகத்தான நற்பணியை வாரி வழங்கிய தாராள மனம்கொண்ட சுவர்ணப்பிரபா குடும்பத்தினருக்கும், இதனைச் செவ்வனே ஒருங்கிணைத்து முடித்த அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் எமது






