கல்லடி ராமகிருஷ்ண மிஷனில் கதிர்காம பாதயாத்திரீகர்கள்

 















யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான கதிர்காம பாதயாத்திரீகர்கள்  ஒரு மாத கால நிறைவில் நேற்று முன்தினம் மட்டக்களப்பு கல்லடி ராமகிருஷ்ண மிஷனை வந்தடைந்தனர்.

அங்கு இராமகிருஷ்ண மிஷன் சுவாமி ஸ்ரீமத் பிரம்மன்யானந்நா   மஹராஜ் , அவர்களை வரவேற்று உபசரித்தார்.

இகிமி கல்லடி ஆச்சிரம பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ்ஜின் வழிகாட்டலில் முன்னதாக ராமகிருஷ்ண ஆலயத்தில் பஜனை இடம்பெற்றது.

 அதைத் தொடர்ந்து சுவாமி பிரமண்யானந்தா ஜீ மற்றும் பாதயாத்திரை குழு ஆலோசகர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் சொற்பொழிவாற்றினார்கள்.
 
 பின்னர் அன்னதானம் நடைபெற்று 
மணிமண்டபத்தில் அவர்கள் ஓய்வெடுத்து மாலையில் வழமை போல  சிவபுரியில் வைத்திய முகாம் இடம் பெற்றது. மிசன் ஆர்வலரும் முன்னாள் அதிபரும் தவிசாளருமான சிவ.அகிலேஸ்வரனும் கலந்து கொண்டார்.


128 அடியார்கள் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 (வி.ரி.சகாதேவராஜா)