இலங்கையை நோக்கி இரண்டு எரிபொருள் ஏற்றிய கப்பல்கள் வந்து கொண்டிருக்கின்றன .

 


எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளையும், மறுநாளும் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

பெற்றோலிய கூட்டுத்தாபன முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திகுமார அது தொடர்பான தகவலை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் ஒக்டேன் 95 பெற்றோல் 7 ஆயிரம் தொன் மற்றும் ஒக்டேன் 92 பெற்றோல் 29 ஆயிரம் தொன் ஆகியவற்றை ஏற்றிக் கொண்டு நாளைய (10) தினம் எரிபொருள் தாங்கிக் கப்பலொன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளது.