காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் மற்றும் தீமிதிப்பு சடங்கு நேற்று (10) புதன்கிழமை நடைபெற்றபோது
“சக்திராகம்” எனும் 33 பக்திப் பாடல்களை கொண்ட இறுவட்டு பக்தி பூர்வமாக வெளியிடப்பட்டது.
இவ் இறுவட்டு வெளியீட்டு விழா ஆலய பரிபாலன சபையின் உப தலைவர் கே.தங்கவடிவேல் முன்னிலையில், நெறியாளர் வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.
பாடலுக்கு நவீன தொழிநுட்பத்தில் இசையமைப்பை விபுலமணி இ.கோபாலசிங்கம் வழங்கியுள்ளதுடன், நெறியாளராக வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா செயற்பட்டார்.
இந்நிகழ்வில் பாடல்கள் 1 மற்றும் பாடல்கள் 2 தொகுதிகள் முன்னர் வெளியிடப்பட்டதுடன், 3ஆம் தொகுதி பாடல்களின் பாடலாசிரியராக ஆலய தலைவர் கலாபூஷணம் விபுலமணி எஸ். இராமநாதன் பணியாற்றியுள்ளார்.
இவ்விழாவில் ஆலய நிர்வாகத்தினர், பக்தர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டு, இறுவட்டு வெளியீட்டை சிறப்பித்தனர்.
ஆலய செயலாளர் கே.கணேசலிங்கம் நன்றியுரையாற்றினார்.
( வி.ரி.சகாதேவராஜா)





