தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைவாக, லேக்ஹவுஸ் நிறுவனம் தனது வரலாற்றில் முதன்முறையாக அதிகபட்சமாக 66 ஊழியர்களை ஒரேதடவையில் நிரந்தர சேவையில் இணைக்கும் நிகழ்வை நேற்று (17) நடத்தியது. நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வெகுசன ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில், வெகுசன ஊடக பிரதியமைச்சர் டொக்டர் கௌசல்யா ஆரியரத்ன மற்றும் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் காமினி வர்ஷமான்ன ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. லேக்ஹவுஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பிரிவு தலைவர்கள், ஆசிரியர் பீடத்தின் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஒரே சந்தர்ப்பத்தில் அதிகளவிலான ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டமை லேக்ஹவுஸ் நிறுவன வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.





