உலக தடகள சம்மேளனம், வெளியிட்டுள்ள
புதிய ஈட்டி எறிதல் உலக தரவரிசையில், இலங்கையின் இளம் வீரர் ருமேஷ் தரங்க
உலக அளவில் 3 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அண்மையில், இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற 'டயமண்ட் லீக்' தடகளத் தொடரில், 92.62 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து அவர் புதிய இலங்கை சாதனையையும், போட்டிச் சாதனையையும் படைத்திருந்தார்.
இதன்மூலம், உலக தடகள தரவரிசையில் 1,324 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இதனிடையே, ஜேர்மனியின் ஜூலியன் வெபர் 1,360 புள்ளிகளுடன் முதலிடத்திலும், கிரெனடாவின் எண்டர்சன் பீட்டர்ஸ் 1,326 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
உலகப் புகழ்பெற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 5 ஆவது இடத்திலும், பாகிஸ்தானின் அர்ஷாத் நதீம் 10 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.





