ஜூன் 26, 27, 28 திகதிகளில் மின்சார வாகன கண்காட்சி

 


இலங்கையின் மின்சார வாகனத் துறையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மற்றும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கண்காட்சி நிகழ்வான Colombo EV Moter Show 2026, Asia Exhibition & Conventions (Pvt) Ltd நிறுவனத்தால் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்படுகிறது.

இவ்வாண்டு கண்காட்சியானது, 2026 ஜூன் 26 முதல் 28 வரை மூன்று நாட்களுக்கு, காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை, கொழும்பில் உள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க நினைவு கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டப (BMICH) வளாகத்தில் நடைபெறும்.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்படும் இந்தக் கண்காட்சி, இலங்கையில் மின்சார வாகனத் துறையின் வளர்ச்சிக்கு கணிசமாகப் பங்களிக்கும் ஒரு முன்னணி மேடையாக உருவெடுத்துள்ளது.

தேசிய மற்றும் சர்வதேச உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், முதலீட்டாளர்கள், வணிகர்கள், புத்தாக்கப் படைப்பாளர்கள் மற்றும் பொதுமக்களை ஒரே இடத்தில் ஒன்றிணைப்பதன் மூலம், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களைக் காட்சிப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.