மட்டக்களப்பு, கல்லடி ஸ்ரீ கிருஷ்ணசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத் திருவிழா இன்று 05-06-2026 வெள்ளிக்கிழமை முதலாம் நாள் திருவிழாவுடன் பக்திப்பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.
எதிர்வரும் 17ஆம் திகதி புதன்கிழமை வரை நடைபெறவுள்ள இத்திருவிழாத் தொடரில், தினசரி விசேட பூஜைகளும் உபயகாரர்களின் திருவிழாக்களும் இடம்பெறவுள்ளன.
திருவிழா மற்றும் உபயகாரர்கள் விபரம்:
| தேதி | திருவிழா விபரம் | உபயகாரர்கள் |
| 05-06-2026 (இன்று) | 1ம் நாள் திருவிழா | அமரர் பசுபதி குடும்பத்தினர் |
| 06-06-2026 (நாளை) | 2ம் நாள் திருவிழா | அமரர் விஸ்வநாதன் குடும்பத்தினர் (திரு. திருமதி சுப்பிரமணியம்) |
| 07-06-2026 (ஞாயிறு) | 3ம் நாள் திருவிழா | திரு. திருமதி சுஜிதரன் சௌதா குடும்பத்தினர் (V.T. நடராஜா) |
| 08-06-2026 (திங்கள்) | 4ம் நாள் திருவிழா | திரு. திருமதி புஷ்பராஜா குடும்பத்தினர் |
| 09-06-2026 (செவ்வாய்) | 5ம் நாள் திருவிழா | திரு. திருமதி தனபாலன் குடும்பத்தினர் |
| 10-06-2026 (புதன்) | 6ம் நாள் திருவிழா | பகல்: அமரர் செல்வராசா குடும்பத்தினர் இரவு: பரமேஸ்வரன் குடும்பத்தினர் |
| 11-06-2026 (வியாழன்) | 7ம் நாள் திருவிழா | அமரர் பிறேமானந்தன் (கோபி) குடும்பத்தினர் |
| 12-06-2026 (வெள்ளி) | 8ம் நாள் திருவிழா | அமரர் வடிவேல் (அகில்) குடும்பத்தினர் (-திரு. திருமதி உதயகுமார் யாழினி) |
| 13-06-2026 (சனி) | 9ம் நாள் திருவிழா | பகல்: அமரர் தியாகராசா குடும்பத்தினர் மாலை (கல்யாணக்கால் வெட்டுதல்): திரு. திருமதி கணநாதன் குடும்பத்தினர் |
| 14-06-2026 (ஞாயிறு) | 10ம் நாள் (மௌனபூசை) | திரு. J. நடேசன் குடும்பத்தினர் (அதிகாலை திருக்கல்யாணம் இடம்பெறும்) |
| 15-06-2026 (திங்கள்) | 11ம் நாள் (சக்கரையமுது, அன்னதானம்) | சக்கரையமுது: அமரர் இராஜரெட்ணம் குடும்பத்தினர் அன்னதானம்: பொதுமக்கள் |
| 17-06-2026 (புதன்) | நிறைவு நாள் (இரவு) | ஆஞ்சநேயர் பூசை: அமரர்கள் வேலுப்பிள்ளை ரெட்ணம் குடும்பத்தினர் (வே. இரத்தினவேல் - பாஸ்கரன்) |
எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணபகவானின் திருவருள் வேண்டி ஆலயத்தில் இடம்பெறும் அனைத்து உத்ஸவ மூர்த்தி வழிபாடுகளிலும், அன்னதான நிகழ்வுகளிலும் அன்பு கிருஷ்ண பக்த அடியார்கள் அனைவரும் குடும்ப சகிதம் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ஆலய நிருவாகத்தினரும் உபயகாரர்களும் அன்போடு அழைக்கின்றனர்.



















