2026ம் ஆண்டுக்கான கதிர்காம காட்டுப்பாதை திறப்பு ஜூலை 10ம் திகதி வெள்ளிக்கிழமை என அதிகாரபூர்வமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று(5) வெள்ளிக்கிழமை கதிர்காமத்தில் மொனராகலை அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
முக்கிய திகதிகள் விபரம்:
காட்டுப்பாதை திறப்பு: 2026.07.10 வெள்ளி
காட்டுப்பாதை மூடல்: 2026.07.25 சனி
கந்தனின் திருவிழா ஆரம்பம்: 2026.07.15 புதன்
கந்தனின் தீர்தோற்சவம்: 2026.07.29 புதன்
15 நாட்கள் மட்டுமே காட்டுப்பாதை பக்தர்களுக்கு திறந்திருக்கும்.
தீர்தோற்சவத்துடன் இவ்வாண்டு விழா நிறைவடையும்.
கதிர்காமம் செல்ல திட்டமிட்டிருக்கும் பக்தர்கள் இந்த திகதிகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
வழமையாக 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரை அடியார்கள் செல்வது வழமை.
பாதை திறப்பு முதல் நாளிலே சுமார் 8 ஆயிரம் பேர் இறங்குவார்கள்.
( வி.ரி.சகாதேவராஜா)

.jpg)

.jpeg)
.jpeg)





