இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்கள் 19 மரணம்.

 


இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 33,572 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மே மாதத்தில் மாத்திரம் 8,321 டெங்கு நோயாளர்கள் அறிக்கை செய்யப்பட்டுள்ளதாக சமூக சுகாதார விசேட நிபுணர் மருத்துவர் துஷானி தாபரே குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலிருந்தே பதிவாகியுள்ளனர்.

மேலும், 72 சுகாதார அதிகாரி (MOH) பிரிவுகள் டெங்கு பரவும் அபாயம் அதிகமுள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டில் பதிவான ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களில் சுமார் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அதேநேரம் தென் மாகாணத்தில் 16 சதவீதமும், சபரகமுவ மாகாணத்தில் 9 சதவீதமும் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.