தெற்காசிய நாடுகளிற்கிடையிலான 18 வயதுக்கு உட்பட பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை தேசிய அணிக்காக யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மடம் கல்லூரி மாணவியான லூட்சி றெஜினஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தெற்காசிய மட்ட கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி வடமாகாண பாடசாலை மாணவி ஒருவர் தேர்வு செய்யப்பட்டமை இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில் இலங்கையில் இடம்பெற்ற போட்டியில் இந்தியாவுடன் மோதிய இலங்கை அணி இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. யாழ். மாவட்டத்திற்கும் கல்லூரிக்கும் பெருமைசேர்த்த இம் மாணவியின் பயிற்சியாளராக தனுஷ் ராஜசோபனா விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.





