இலங்கை சமாதான நீதிவான்கள் சங்கத்தின் (Association of the Justices of the Peace of Sri Lanka) ஏற்பாட்டில் "சமாதான நீதிவான்களுக்கான இரவு - 2026 (“JP’s Night 2026”) 2026 ஏப்ரல் 26 ஆம் திகதி கொழும்பு, முகத்துவாரம் Rock House மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நேபாள நாட்டு தூதுவர் டாக்டர் பூர்ண பகதூர் அவர்கள் பிரதம அதிதியாகவும், மேஜர் ஜெனரல் ஸ்வர்ண போத்தோட்டா அவர்கள் கௌரவ அதிதியாகவும், பிரிகேடியர் ஜெரி ஆல்விஸ் அவர்கள் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்விற்கு Platinum Sponsor ஆக ஹொரணை வசன பேக்கர்ஸ் நிறுவனம் ஆதரவு வழங்கியது. அதன் தலைவர் தயானந்த பொம்புவல, திருமதி விஜயந்தி பெரேரா மற்றும் நந்தன பெரேரா ஆகியோரின் பங்களிப்பு பாராட்டப்பட்டது. Gold Sponsor ஆக டாக்டர் செல்வகுமார் சர்மா, Silver Sponsor ஆக டாக்டர் அல் ஹாஜ் H.M.மஷூன் ஆகியோரும் பங்களிப்பு வழங்கினர். மேலும், சங்கத்தின் தலைவர் டாக்டர் டெக்ஸ்டர் பெர்னாண்டோ அவர்கள் தனது Modern Group of Companies நிறுவனத்தின் ஊடாக Silver Sponsorship வழங்கியதுடன், நிகழ்வில் வழங்கப்பட்ட நினைவுப் பலகைகளுக்கும் அனுசரணை வழங்கினார்.
குறித்த நிகழ்வை வெற்றிகரமாக நடாத்துவதற்கு Ticket Committee தலைவர் ஜனக நுகேரா, பிரதித் தலைவர் ஜயசிங்க பண்டார, திட்ட தலைவர் செல்வரத்தினம் நிமல், முதலாவது பிரதி தலைவர் அம்ஜாத் பார்ஹான், டாக்டர் அப்துல் ஜபார் மற்றும் திருமதி கமில்லஸ், மட்டக்களப்பிலிருந்து முரளிதரன் தனது குழுவுடன் கலந்து கொண்டதுடன், திருகோணமலையிலிருந்து மாவட்ட தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் மட்டக்களப்பிலிருந்து அப்ராரி தனது உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடப்பட்டது.
இந்நிகழ்வில் சங்கத்தின் பொதுச் செயலாளர் சம்பத் ரம்புக்கொத்த அவர்கள் “Best JP of the Year” விருதைப் பெற்றுக் கொண்டார். இதற்காக அவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் டெக்ஸ்டர் பெர்னாண்டோ, நிர்வாகிகள், குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுஉறுப்பினர்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
மேலும் Gihan Caters, Lion Printers, Rock House பணியாளர்கள், “Members” Music Band மற்றும் வசன பேக்கர்ஸ் நிறுவன மேலாளர் முனசிங்க ஆகியோரின் சேவைகள் இதன் போது பாராட்டப்பட்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் தேசிய ஜோதி, சமாஶ்ரீ தேசமானிய உ.உதயகாந்த் (JP) அவர்களது தலைமைத்துவத்தினை பாராட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் உள்ளிட்ட சங்கத்தின் உறுப்பினர்களினால் இலங்கை சமாதான நீதிவான்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரது செயற்பாட்டினை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இலங்கை நீதிவான்கள் சங்கத்தை எதிர்காலத்தில் மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல அனைவரின் தொடர்ந்த ஆதரவும் அவசியம் என நிகழ்வின் போது வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













