பிளாஸ்டிக் இல்லாத கடல் — ஒரு தைரியமான செய்தி.

 

































லியோ கிளப் ஆஃப் பட்டிக்களோ அபெக்ஸ் மற்றும் ஸ்விம் பட்டி சுவிமிங் அகாடமி இணைந்து நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க திறந்தவெளி நீச்சல் திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி கடற்கரையில், சூரிய உதயத்திற்கு முன்னரே அலைகள் ஒரு வரலாற்றை எழுதின. லியோ கிளப் ஆஃப் பட்டிக்களோ அபெக்ஸ் மற்றும் ஸ்விம் பட்டி சுவிமிங் அகாடமி இணைந்து, பிளாஸ்டிக் இல்லாத கடல் என்ற உன்னத நோக்கத்துடன் திறந்தவெளி நீச்சல் திட்டம் என்ற ஒரு தனித்துவமான நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்வு, இளம் லியோக்களின் தலைமைத்துவத்தையும் சுற்றுச்சூழல் மீதான அக்கறையையும் உலகுக்கு பறைசாற்றியது.

மட்டக்களப்பு வரலாற்றில் முதல் முறையாக — பெண் நீச்சல் வீரர்கள் திறந்த கடலில் நீந்தினர்! இது இந்த திட்டத்தின் மிகச்சிறப்பான தருணமாக அமைந்தது. பெண்களும் கடலின் அலைகளை வெல்ல முடியும் என்பதை இந்த வீரமிக்க நீச்சல் வீரர்கள் நிரூபித்தனர்.


 நீச்சல் வீரர்கள்

காலை வெளிச்சம் கடலில் படர்வதற்கு முன்னரே, இந்த தைரியமான நீச்சல் வீரர்கள் கல்லடி கடலில் இறங்கி, பிளாஸ்டிக் இல்லாத கடல் என்ற செய்தியை அலைகள் வழியே உலகுக்கு அனுப்பினார்கள்:



🏊‍♀️ பெண் நீச்சல் வீரர்கள் (வரலாற்று சாதனை) :

அனுஹேஷா • அவிஷ்னா • ஹிமாஷா • அக்ஷனா • அபிரிக்ஷி • ஸ்ட்ரெஃபனி

🏊‍♂️ ஆண் நீச்சல் வீரர்கள் :

வித்துர்ரேன் • ஷியாஃப் • டியான் ஃப்ரிடோ • ஷெவான் • அம்பரிஷ் • டியான்ஸ்டித்