தமிழக அரசியல் வரலாற்றைத் தலைகீழாக மாற்றியைவிஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் .

 


தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்த 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசியல் வரலாற்றைத் தலைகீழாக மாற்றும் வகையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) 108 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இறுதி முடிவுகளின் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்கள், தி.மு.க. கூட்டணி 74 இடங்கள், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்கள் பெற்றுள்ளன.

ஆட்சியைப் பிடிக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், த.வெ.க-விற்கு தற்போது 10 இடங்கள் குறைவாக உள்ளன.

இருப்பினும், சட்டமன்றத்தில் அதிக இடங்களைப் பெற்ற தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்தைத் த.வெ.க பெற்றுள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, த.வெ.க தலைவர் விஜய் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்றும், 2 வார காலத்திற்குள் சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழலில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 10 முதல் 12 இடங்கள் த.வெ.க-விற்குத் தேவைப்படுகின்றன.

இதற்காக மற்ற கூட்டணிகளில் உள்ள சில கட்சிகளின் ஆதரவை விஜய் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் வட்டாரங்களின்படி தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் அல்லது தே.மு.தி.க கட்சிகள்.

அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ம.க.

இந்தக் கட்சிகள் விஜய்க்கு ஆதரவு அளிக்க முன்வந்தால், தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு கூட்டணி ஆட்சி அமைவது உறுதியாகும் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.