இ. மதன் எழுதிய தாய்ப்பசு சிறுகதை நூல் வெளியீட்டு விழா.

 


எழுத்தாளர் திருமலை. இ. மதன் எழுதிய தாய்ப்பசு சிறுகதை நூல் வெளியீட்டு விழா 09.05.2026 சனிக்கிழமை மாலை 4.13 மணிக்கு திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் ஓய்வு நிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் சீ. மதியழகன் தலைமையில் இடம் பெறும்.

நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணியும் கெளரவ அதிதியாக திருகோணமலை மாநகரசபை முதல்வர் க . செல்வராஜா (சுப்ரா) வும், சிறப்பு அதிதிகளாக திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ந . யசிந்தனும், திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தின் கல்வி அபிவிருத்தி பிரிவின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் தி. பார்த்தீபன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
கவிஞர். தில்லைநாதன் பவித்திரன் நிகழ்வை தொகுத்து வழங்குவார்.

ஆசியுரையை வேதாகமமாமணி பிரம்மஸ்ரீ சோ. இரவிச்சந்திரக்குருக்கள் வழங்க, நூல்பற்றிய உரைகளை கவிஞர் தி. லலிதகோபனும், நூல் திறனாய்வாளர் வ . முரளிதரனும் வழங்குவார்கள்.
ஏற்புரையையும் நன்றியுரையையும் நூல் ஆசிரியர் வழங்குவார்