மட்டக்களப்பு, மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகத்தின் 56ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரம்மாண்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி அண்மையில் நடைபெற்றது.
"விளாவூர் யுத்தம்" எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போட்டித் தொடர், கடந்த 03.05.2026 அன்று விளாவட்டவான் ராஜா விளையாட்டு மைதானத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
இப் பிரதேசத்தை சேர்ந்த 29அணிகள் இப்போட்டிகளில் பங்கு கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தன.
நீண்ட வரலாற்றைக் கொண்ட ராஜா விளையாட்டுக் கழகத்தின் இந்த 56ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் அமைந்த இப்போட்டித் தொடரைக் காண்பதற்காக, பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவிலான பொதுமக்கள் மைதானத்தில் திரண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
இப் போட்டியில் காஞ்சிரங்குடா நாகஒளி விளையாட்டுக்கழகம்
இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று மகுடம் சூடியது.
அணிகளுக்கான வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள்.
அரச உயர் அதிகாரிகள்.
சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள்.
சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

















