மஹிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச இருவரின் வீழ்ச்சிக்கு பெசில் ராஜபக்ச முக்கிய காரணம் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாயக்கார தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையின் பிரபல வானொலி சேவையொன்று வாசுவுடன் நடத்திய் அரசியல் கலந்துரையாடலிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அதில் அவர் மேலும் குறிப்பிட்ட கருத்துக்கள்,
மஹிந்த ராஜபக்ச எனது நெருங்கிய நண்பர்.நாட்டில் அன்று தொழிலாளர் உரிமைகளுக்காக செய்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பாதையாத்திரைகளுக்கு மஹிந்த எங்களுடன் இணைந்து பூரண ஒத்துழைப்பு வழங்கிய இடதுசாரி கொள்கையில் செயற்பட்டவர்.
மஹிந் ஜனாதிபதியாக பதியேற்ற பின்னர் அவர் பெசிலின் பிடிக்குள் அகப்பட்டுக் கொண்டார்.குறிப்பாக சொல்லப்போனால் பெசில் ராஜபக்சவால் மஹிந்த சிறைபிடிக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னரே அனைத்து பிரச்சினைகளும் உருவானது.பெசில் மஹிந்தவின் இடதுசாரி கொள்கைக்கு அப்பாற்பட்டவர். அதன் தாக்கம் மஹிந்தவை அழிவுக்குள் கொண்டு சென்றுவிட்டது.
அதேபோல் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்து காலத்தில் எரிவாயு கொள்வனவு டெண்டரை அமெரிக்க நிறுவனத்திற்கு முழுமையாக வழங்க வேண்டும் என பெசில் தெரிவித்தார்.
நாங்கள் அது ஆபத்தான அதை செய்ய வேண்டாம் என கம்மன்பில விமல்வீரவன்ச ஆகியோர் அதற்கு எதிராக செய்தியாளர் மாநாடும் நடத்தினர்.
அதன் பின்னர் அவர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர்.அப்போது நான் மட்டும் ஏன் இருப்பது என நினைத்து நானும் அமைச்சரவையில் இல்லை அறிவித்தேன்.
அதன் ஆரம்பம் தான் அமைச்சரவையில் குழப்பம் ஏற்பட்டது.பின்னர் மஹிந்த ராஜபக்சவிடம் இருந்த நிதியமைச்சையும் பறித்துக் கொண்டார்.ஏனென்றால் அவருக்கு பிடிக்காத திட்டங்களை நிராகரிப்பதற்காக.
நிதியமைச்சர் விருப்பம் இல்லாத எந்த திட்டங்களும் நடைமுறைப்படுத்த முடியாது இவ்வாறே பெசிலின் ஆட்டம் தொடந்தது என குறிப்பிட்டுள்ளார்.





