கட்டுநாயக்க சர்வதேச வானூர்த்தி நிலையத்தை நோக்கி வருகைதந்த சில வானூர்திகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

 


சீரற்ற வானிலைக் காரணமாக கட்டுநாயக்க சர்வதேச வானூர்த்தி நிலையத்தை நோக்கி வருகைதந்த சில வானூர்திகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

அதற்கமைய, 05 வானூர்திகளை மத்தளை சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு திசை மாற்றி அனுப்பியுள்ளதாக சிவில் வானூர்தி சேவைகள் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம், கெப்டன் தமித்த ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அத்துடன், 02 வானூர்திகள் இந்தியாவின் கொச்சின் மற்றும் திருவானந்தபுரம் ஆகிய சர்வதேச வானூர்தி நிலையங்களுக்கு திசை மாற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டார், சாஜா, அபுதாபி, புதுடெல்லி உள்ளிட்ட வானூர்தி நிலையங்களிலிருந்து இலங்கைக்கு வருகைதந்த வானூர்திகளே திசை மாற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன