ஆசியாவின் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயமாக உருவெடுத்தது இலங்கை ரூபா: புளூம்பெர்க் அறிக்கை



கொழும்பு: பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தற்போதைய சாதகமான முன்னேற்றங்களின் பலனாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருவதாக சர்வதேச நிதி ஊடகமான 'புளூம்பெர்க்' (Bloomberg) இணையதளம் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று வருட காலத்தில் பதிவான மிக உயர்ந்த வளர்ச்சி வீதத்தைக் குறியிட்டு, ஆசிய பிராந்தியத்திலேயே மிகச் சிறந்த செயல்திறனைக் காட்டிய (Best Performing Currency) நாணயமாக இலங்கை ரூபா உருவெடுத்துள்ளதாக புளூம்பெர்க் தனது சமீபத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் நிதித்துறையின் ஸ்திரத்தன்மை காரணமாகவே ரூபாவின் மதிப்பு இவ்வாறு தொடர்ச்சியாக வலுவடைந்து வருவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.