இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மேலும் விரிவுபடுத்தி, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான மேலும் பல முக்கிய நிறுவனங்கள் மற்றும் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானியில், மின்சார விநியோகம், எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம், வைத்தியசாலை மற்றும் சுகாதார சேவைகள், பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்து, வீதி, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து, நீர் வழங்கல் மற்றும் வடிகால், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம், அம்பியூலன்ஸ் சேவைகள், அரச வங்கி மற்றும் காப்பீட்டு சேவைகள், நீர்ப்பாசனம், தொலைத்தொடர்பு மற்றும் ஊடக சேவைகள் ஆகியவை அத்தியாவசியத் துறைகளில் அடங்கும்.
மேலும், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், கிராம அலுவலர்கள், சமுர்த்தி அதிகாரிகள், விவசாய அலுவலர்கள், உள்ளூராட்சிகள் மற்றும் சுற்றுலா தொடர்பான உள்கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் சேவைகளையும் இந்த அறிவிப்பு உள்ளடக்கியுள்ளது.





