புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யாவின் படுகொலை வழக்கில், குற்றவாளிகளின் மேன்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், இன்று புதன்கிழமை அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்துள்ளது.
‘சுவிஸ் குமார்’ என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் உள்ளிட்ட நான்கு பிரதான குற்றவாளிகளுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.யாழ்ப்பாணம் சுற்றுலா
தண்டனைக்கு எதிராகக் குற்றவாளிகள் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் குழாம் நிராகரித்தது.
வழக்கில் தொடர்புடைய ஏனைய இரண்டு குற்றவாளிகளின் தண்டனைகளை இரத்து செய்து அவர்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய நீதிபதிகள் குழுவினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த 2015ஆம் ஆண்டு புங்குடுதீவில் பாடசாலை மாணவி வித்யா கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற ட் விசாரணையின் முடிவில், 2017ஆம் ஆண்டு ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனை பெற்றவர்களில் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில், தற்போது நான்கு பேரின் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏறத்தாழ 9 ஆண்டுகளாக நீடித்த இந்த சட்டப் போராட்டத்தில், இன்றைய தீர்ப்பு ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.





