மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம்.











 கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காவத்தமுனை காகித நகர் கிராமத்தினுள் நேற்றிரவு புகுந்த காட்டு யானை அட்டகாசம் புரிந்துள்ளதுடன், குடிசைகள், விவசாய பயிர்ச்செய்கைகளுக்கும் சேதத்தை உண்டு பண்ணியுள்ளது. 

தொடர் காட்டு யானைகளின் அச்சுறுத்தலினால் உயிரச்சுறுத்தல்களும் சொத்தழிகவுகளும் ஏற்படுவதுடன், வாழ்வாதரமும் பாதிக்கப்படுவதாக பிரதேச மக்கள் கவலையும் விசனமும் தெரிவிக்கின்றனர். 

கிராமத்தை அண்டிய காட்டுப்பகுதியில் குடி கொண்டுள்ள யானைக்கூட்டம் அயல் கிராமங்களை அச்சுறுத்தி வருவதுடன், உயிராபத்துக்களையும் பயந்தரும் நூற்றுக்கும் அதிகமான தென்னை மற்றும் கனி தரும் மரங்களையும் அழித்து நாசப்படுத்தியுள்ளன. 

இதனைக்கட்டுப்படுத்த பிரதேச சபை மற்றும் பிரதேச செயலகங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும், அச்சுறுத்தல் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

இதற்கான நிரந்தரத்தீர்வுகளைப் பெற்றுத்தந்து உயிரச்சுறுத்தல் சொத்தழிகளிலிருந்து தம்மைப்பாதுகாக்க நிரந்தர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 ந.குகதர்சன்