ஈரானின் எண்ணெய் கப்பல்கள் அல்லது வணிகக் கப்பல்கள் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் கடற்படை சொத்துக்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும்

 


ஈரானின் எண்ணெய் கப்பல்கள் அல்லது வணிகக் கப்பல்கள் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் கடற்படை சொத்துக்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) எச்சரித்துள்ளது.
​ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, தனது நாட்டின் கடல்சார் வர்த்தகத்தைப் பாதுகாக்க ஈரான் எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, சர்வதேச கடல் பகுதிகளில் நிலவும் பதற்றமான சூழலில், அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பகிரங்க மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.