மழை காரணமாக செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளன.

 


திடீரென பெய்த மழை காரணமாக செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளன.

புதைகுழி பகுதிக்குள் வெள்ள நீர் தேங்கியமையால் , நல்லூர் பிரதேச சபையின் "கலி பவுசர்" மூலம் வெள்ள நீர் வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 11ஆம் நாள் அகழ்வு பணிகள்  வெள்ளிக்கிழமை காலை ஆரம்பமானது.

 அகழ்வு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், செம்மணி பகுதியில் திடீரென மதியம் மழை பொழிந்தமையால் , அகழ்வு பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டன.

அத்துடன் புதைகுழி பகுதிக்குள் வெள்ள நீரும் தேங்க தொடங்கியது. அதனை அடுத்து நல்லூர் பிரதேச சபையின் கலி பவுசர்களை அழைத்து , அவற்றின் மூலம் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டன

இந்நிலையில் நேற்றைய அகழ்வு பணிகளின் போது, ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூடுகளில் இரண்டு என்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

 அதன் அடிப்படையில் இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில், 260 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 256 மனித என்பு கூட்டு தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.