தமிழ் நாடு முதலமைச்சராக விஜய் பதவியேற்றமையினை முன்னிட்டு மட்டக்களப்பு இளைஞர்களினால் பட்டாசி கொழுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இன்றைய தினம் தமிழ் நாட்டின் 9 வது முதலமைச்சராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் சந்திர சேகர் யோசப் விஜய் முதலமைச்சராக தனது பதிவியினை நேரு உள்ளக அரங்கில் பொறுப்பேற்று கொண்டதனை முன்னிட்டு இலங்கையில் உள்ள விஜய் ரசிகர் கள் மற்றும் மட்டக்களப்பு விஜய் ரசிகர்கள் சார்பாகவும் மட்டக்களப்பு இளைஞர்களால் வாழ்ந்து தெரிவிக்கும் வெனர் கட்டி, பட்டாசி கொழுத்தி வீதியால் பயணித்த மக்களுக்கு இனிப்பு பண்டங்கள் மற்றும் குளிர்பானம் என்பன பகிர்ந்து மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.
அதே வேளை தாம் கொழுத்திய பட்டாசி குப்பைகளை அவர்களே முன்னின்று துப்பரவு செய்தது முன்னுதாரனமாக செயற்பட்டுள்ளதுடன், குறித்த நிகழ்வுகள் யாவற்றையும் மட்டக்களப்பை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான எஸ்.பிரவீன்குமார் ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






