2025 (2026) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலப்பகுதி குறித்து பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் உடற்கல்வி உள்ளிட்ட இறுதிச் செய்முறைப் பரீட்சைகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பெறுபேறுகளைத் தயாரிக்கும் இறுதிக்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில், மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக இணையத்தளத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 4,50,000 மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இந்தப் பெறுபேறுகள், உயர்தரக் கல்வியைத் திட்டமிடுவதற்கான மிக முக்கிய மைல்கல்லாக அமையவுள்ளது.





