ஈரான் துறைமுகங்களில் அமெரிக்கப் படைகள் கடற்படை முற்றுகையைச் செயற்படுத்தி வருவதுடன், ‘ப்ராஜெக்ட் ஃப்ரீடம்’ (Project Freedom) திட்டத்திற்கும் ஆதரவளித்து வருவதாக அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்க கடற்படை கப்பல்கள் எதுவும் தாக்கப்படவில்லை என்றும் அந்த மையம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கைகளை மீறி ஜாக் தீவுகள் பகுதிக்கு அருகில் சென்ற அமெரிக்கக் கடற்படை கப்பல் மீது இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாக ஈரானின் ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் முன்னதாக வெளியிட்டிருந்த தகவலை அமெரிக்காவின் இந்த அறிவிப்பு முரண்படுத்துகிறது.
இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்திற்கு உதவும் வகையில், 'ப்ரொஜெக்ட் ஃப்ரீடம்' என்ற திட்டத்தை அமெரிக்கா முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





